தங்கம் விலை.. மீண்டும் குறையுமா..குழப்பத்தில் ஆர்வலர்கள்..!
தங்கம் விலை கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் ஏற்றம் காணமல் வர்த்தகமாகி வருகின்றது. அவ்வப்போது ஏற்றம் காண ஆரம்பித்தாலும், அது மீண்டும் சரிவினைக் நோக்கியே வருகின்றது.
இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
ஏனெனில் தங்கத்திற்கு சாதகமாக சில காரணிகள் இருந்தாலும், வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது.
இதனால் தங்கம் விலை இன்னும் குறையுமோ? என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அது தங்கத்தின் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இது அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உள்பட பல அதிகாரிகள், தர்போதைக்கு நாணயக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்று வேறு வேறு வழிகளில் உறுத்திபடுத்தியதையடுத்து, டாலரின் மதிப்பானது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கத்தின் விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
ஆபரண/தூய தங்கத்தின் விலை
23rd June 2021
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 4,410 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 35,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் அதிகரித்து, 4,860 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 38,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரிப்பு
கிட்டத்தட்ட 13 சதவிகிதம் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதைப் பயன்படுத்தி கொண்டு பழைய நகைகளை விற்கும் போக்கு அதிகரித்திருப்பதாக மும்பையை சேர்ந்த தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பழைய நகைகளை விற்பது ஓராண்டில் 10 முதல்15 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, பழைய நகைகளை விற்று லாபம் காணும் போக்கு மக்களிடையே அதிகரித்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள பழைய தங்கத்தை நம்பிக்கையான முறையில் பாதுகாப்பாக மற்றும் துரிதமாக விற்க அணுகவும் GOLDMAX