தங்கத்தில் எப்படி அதிக லாபம் பார்ப்பது?
தங்கம் ஓரளவுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும் முதலீடு அவ்வளவு தான்.
தங்கத்தை லாபகரமாக வாங்குவது எப்படி?
ஆபரணத் தங்கத்தில் செலவு அதிகம்
தங்கம் வாங்குவதற்கு முன் அதை எதற்கு வாங்கப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். முதலீட்டுக்காக வாங்குகிறோமா அல்லது ஆபரணத்துக்காகவா என முடிவு செய்து கொள்ளுங்கள்.
தங்க நகைகள்
இதில் ஆபரணத்துக்காக நகை வாங்குகிறீர்கள் என்றால்,அதிக வேலைபாடு இல்லாத நகைகளாக வாங்குவது, செய்கூலி மற்றும் சேதாரத்தைக் குறைக்க உதவும். அதே போல விற்கும் போதும் ஓரளவுக்கு நல்லவிலை போகும்.
முதலீட்டுக்காக வாங்கப் போகிறீர்கள் என்றால் ஆபரணத் தங்கத்தை தவிர்ப்பது நல்லது.
செய்கூலி/ஜிஎஸ்டி வரி
3 சதவீதம் ஜிஎஸ்டி வரி, 5 – 10 சதவீதம் வரை செய்கூலி, சுமார் 22 சதவீதம் வரை சேதாரம், இறக்குமதி வரி என ஆபரணத் தங்கத்தில் பல்வேறு கூடுதல் செலவுகள் இருக்கின்றன.
ஆபரணத் தங்கத்தில் மேலே குறிப்பிட்ட செலவுகள் இருப்பதால், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தால் கூட லாபம் குறையும்.
சாவரின் தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond)
இந்த செலவுகள் ஏதுமின்றி சாவரின் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கலாம்.
குறைந்த செலவில் தங்கம் வாங்கி அதிக லாபம் பார்க்க இது சிறந்த வழி